Monday, 1 January 2018

நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்!

All India Rajinikanth Fans Association

By DIN  |   Published on : 01st January 2018 05:22 PM  |   அ+அ அ-   |  
rajini-7zd
http://www.rajinimandram.org  என்ற இணையதளத்தை தொடங்கி ட்விட்டரில் ரஜினி வீடியோ வெளியிட்டுள்ளார். 

 தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்புவோர் இந்த இணையத்தில் தங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உறுப்பினராக ரஜினி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் 60 ஆயிரம் மன்றங்கள் இருப்பதாக தெரிகிறது. அனைத்து உறுப்பினர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த தளம் தொடங்கப்பட்டுள்ளதாக ரஜினி கூறியுள்ளார்.

பாபா முத்திரையுடன் இந்த இணைய தளப் பக்கம் காட்சியளிக்கிறது. எளிமையாக பதிவு பக்கமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. RAJINI MANDRAM என்ற செயலி மூலமும் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

Happy New Year to All